அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெண் தொழில்முனைவோர் அனைவருக்கும் வணக்கம்... நமது ஆக்டிவ் நிறுவனம் அரசு சாராமல் அரசியல் சாராமல் இலாப நோக்கமற்று கடந்த 12 வருடங்களாக *பட்டியலின மற்றும் பழங்குடியின* மக்களின் பொருளாதார நிலையை முன்னேற்ற *புரட்சியாளர் அம்பேத்கரின்* கனவான *பொருளாதார விடுதலையை* அடையும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்பது நீங்கள் அறிந்ததே!
ACTIV (ஆக்டிவ்) ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு - புதுச்சேரி சார்பில் வரும் 2024 ஜூலை 2ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை *பட்டியலின மற்றும் பழங்குடியின பெண் தொழில்முனைவோர்க்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெண் தொழில்முனைவோர் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் தொழில் அறிவை மேம்படுத்திக்கொள்ளவும் தொழில்முனைவோர் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்திக்கொள்ளவும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றோம்.
இடம்: புதுவை தமிழ் சங்கம், வெங்கடாநகர், புதுச்சேரி
தேதி: 2024 ஜூலை 2
நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை
நுழைவுக் கட்டணம் இல்லை, ஆனால் முன்பதிவு கட்டாயம்
கலந்து கொண்டு பயனுற விரும்பும் பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் செய்ய விருப்பம் உள்ள பெண்கள் கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து உங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்
முன்பதிவு செய்த நபர்களுக்கு மட்டுமே அனுமதி முன்னுரிமை வழங்கப்படும்.